ஜீ5 பிரீமியம் இலவச சந்தாவுடன் வி புதிய சலுகை அறிவிப்பு

Vodafone Idea Ltd (Vi) has launched new tariff plans for prepaid customers.

0
100

வி(வோடபோன் ஐடியா) நிறுவனம் புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. புதிய சலுகைகளுடன் ஒரு வருடத்திற்கான ஜீ5 பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

வி ரூ. 355, ரூ. 405, ரூ. 696, ரூ. 795 மற்றும் ரூ. 2595 போன்ற சலுகைகளுடன் ஒரு வருடத்திற்கான ஜீ5 பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது.

இவற்றில் ரூ. 355 மற்றும் ரூ. 405 சலுகைகளில் முறையே 50 ஜிபி மற்றும் 90 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு வருடத்திற்கான ஜீ5 பிரீமியம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இரு சலுகைகளுக்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

வி ரூ. 595(56 நாட்கள் வேலிடிட்டி), ரூ. 795(84  நாட்கள் வேலிடிட்டி) மற்றும் ரூ. 2595 (365 நாட்கள் வேலிடிட்டி) விலை சலுகைகளில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ஜீ5 சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

வழக்கமாக ஒரு வருடத்திற்கான ஜீ5 பிரீமியம் சந்தா ரூ. 699 விலையில் வழங்கப்படுகிறது. இதில் 12 மொழிகளில் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் பல்வேறு தரவுகள் வழங்கப்படுகின்றன. விசலுகைகளில் ஜீ5 சந்தா மட்டுமின்றி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையும் வழங்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here