ஜி.எஸ்.டி. மூலம் தமிழக அரசுக்கு கடந்த 9 மாதங்களில் ரூ. 31 ஆயிரத்து 350 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக இந்த வருவாயை தமிழகம் ஈட்டியுள்ளது.

மத்தியிலும், வெவ்வேறு மாநிலங்களிலும் பல்வேறு வரி விதிப்பகள் நடைமுறையில் இருந்து வந்த நிலையில் அனைத்து வரி விதிப்பகளையும் ஒரே வரியாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம், நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2017 ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து ஜி.எஸ்.டி. நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. ஆனால் இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி அதிகமாக இருப்பதாக கூறி மக்கள் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனை சரி செய்வதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம் குறித்துப் பல முடிவுகளை எடுத்தனர்.

இந்த நிலையில் ஜிஎஸ்டி மூலம் தமிழக அரசு பெற்ற வருவாய் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here