கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி தலித் மாணவி ஜிஷா கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் அவருடைய வீட்டிலேயே வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு தரப்பினர் நீதிகேட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கேரளாவில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, ஜிஷாவின் மூத்த சகோதரிக்கு குன்னத்துநாடு தாலுகா அலுவலகத்தில் உதவி அலுவலர் பணியை வழங்கியது. இதற்கு முன்னதாகவே ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு அவருக்கு அரசு வேலை வழங்க தீர்மானித்திருந்து நிறைவேற்றாமல் இருந்தது.

இதையும் படியுங்கள் : #JusticeForJisha: ஜிஷாவும் அம்பேத்கரும்

மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக இதுவரை எந்த துப்பும் கிடைக்காத நிலையில் ஏடிஜிபி.சந்தியா தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து விசாரிக்குமாறு இடதுசாரி அரசு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்