ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிவித்த டபுள் டமாக்கா சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. இதுதவிர ரூ.299 சலுகை மாற்றியமைக்கப்பட்டு கூடுதலாக 1 ஜிபி 4ஜி டேட்டா வழங்குகிறது.

முன்னதாக ரூ.299 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ், ஜியோ App-பை பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தற்சமயம் இதே சலுகையில் தினமும் 4.5 ஜிபி டேட்டா மற்றும் இதர சலுகைகளை 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.

புதிய சலுகையின் கீழ் ஜூன் 30-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இச் சலுகைகள் வழங்கப்படுகிறது.ரூ.299 சலுகை தவிர ரிலையன்ஸ் ஜியோவின் இதர பிரீபெயிட் சலுகைகளும் மாற்றியமைக்கப்பட்டு

ரிலையன்ஸ் ஜியோ ரூ.149, ரூ.249, ரூ.399 மற்றும் ரூ.449 பிரீபெயிட் சலுகைகளில் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளின் வேலிடிட்டி மாற்றப்படவில்லை. ரூ.198, ரூ.398, ரூ.448 மற்றும் ரூ.498 சலுகைகளில் தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ App-பை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

ரூ.799 சலுகையில் தினமும் 5.5 ஜிபி மற்றும் 6.5 ஜிபி டேட்டாவும்,. ரூ.300 மற்றும் அதற்கும் அதிக விலையில் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.100 தள்ளுபடியும் ரூ.300 மற்றும் அதற்கும் குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்வோருக்கு மைஜியோ செயலியின் போன்பெ வாலெட்டில் 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here