ரிலையன்ஸ் ஜியோ தனது புத்தாண்டு சலுகையை பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்குகிறது.

DvhTXtaU0AA9PhL

இச் சலுகையில் ரூ.399 விலையில் ரீசார்ஜ் செய்வோருக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 100 சதவிகிதம் கேஷ்பேக் ஏஜியோ வவுச்சர் வடிவில் வழங்கப்படும்

இச் சலுகையைப் பெற பயனர்கள் தங்களது ஜியோ ஆப் அல்லது ஜியோ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ.399 விலையில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஜியோ அறிவித்திருக்கும் இந்த புத்தாண்டு சலுகையை டிசம்பர் 28 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 30, 2019 வரை ரீசார்ஜ் செய்து பெற முடியும்.

ரீசார்ஜ் செய்யப்பட்ட 72 மணி நேரத்திற்குள் புத்தாண்டு சலுகையின் கீழ் வழங்கப்படும் ஏஜியோ வவுச்சர்கள் பயனர்களின் மைஜியோ ஆப்-பில் வழங்கப்படும்.

DvgkHEuVsAIZVrl

இந்த வவுச்சர்களை பயனர்கள் ஏஜியோ வலைத்தளத்தில் (ajio.com) ரூ.1000 அல்லது அதற்கும் அதிக மதிப்புள்ள பொருட்களை வாங்கும் போது பயன்படுத்தலாம். இந்த கூப்பனை மார்ச் 15, 2019-க்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்