ஜியோ டிவி ஆப் தனது புதிய அப்டேட்டை, ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஜ.ஓ.எஸ் போன்களுக்கு வெளியிட்டுள்ளது. புதிய இன்டர்ஃபேஸ் மூலம் உள்ளே இருக்கும் தொடர்கள் உங்களுக்குகாக ஹைலைட் செய்து காட்டப்படுகிறது.

ஜியோ டிவி ஆப் மூலம் உங்களுக்கு விருப்பமான தொடர்கள் மற்றும் ஷோக்களை, தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகும் அதே நேரத்தில் ஜியோ டிவி ஆப்பில் இலவசமாக ஜியோ வாடிக்கையாளர்களால் பார்க்க முடியும்.

தொடர்களின் தன்மைக்கேற்ப, அவற்றை பிரித்து கண்டெண்டுகளை தனித்தனியாக பயனாளர்களுக்கு எளிதாக்கி வழங்குகிறது. மேலும் ஜியோ நிறுவனம் ஜியோ கிரிக்கெட் ஹெச்டி என்னும் புதிய சேனலை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேனலில் இந்தியா பங்குபெறும் அனைத்து போட்டிகளும் நேரடி ஒலிபரப்புச் செய்யப்படுகிறது.

மேலும் ஜியோ கிரிக்கெட் ஹெச்டி சேனல் மூலம் முக்கிய கிரிக்கெட் போட்டிகளையும் தொடர்களையும் கண்டுகளிக்க முடியும். இந்த சேனல் ஆங்கிலம் மற்றும் நான்கு வாட்டார மொழிகளில் ஓளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த சேனலை பார்க்க, உபயோகத்தில் இருக்கும் ஒரு ஜியோ எண் மட்டுமே போதும் தனியாக கட்டணங்கள் ஏதும் தேவையில்லை. மேலும் பிடித்த சேனல்களை தேர்வு செய்து அவற்றைப் பார்க்கும் வசதி மற்றும் உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து கொள்ளும் வசதி என வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த அப்டேட் வெளிவந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here