அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் L Catterton நிறுவனம் ஜியோவில் ரூ.1894.50 கோடி முதலீடு செய்து, 0.39% பங்குகளை வாங்கியுள்ளது.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ திகழ்கிறது. ஜியோமார்ட் என்ற பெயரில் ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்திலும் களமிறங்கியது. கடந்த சில வாரங்களாக உலகின் முன்னணி நிறுவனங்கள் ஜியோவில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. அந்த வகையில் முன்னணி நுகர்வோர் பிராண்டுகளில் அதிக முதலீடுகளை செய்த L Catterton நிறுவனம் ரூ.1,894.50 கோடி ஜியோவில் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் ஜியோவில் 0.39% பங்குகளை அந்நிறுவனம் வாங்கியுள்ளது.


இதன் பங்கு மதிப்பு சுமார் ரூ. 4.91 லட்சம் கோடி ரூபாயாகவும், நிறுவன மதிப்பு ரூ.5.16 லட்சம் கோடியாகவும் இருக்கிறது. இது ஜியோவில் முதலீடு செய்த 10வது நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் மார்க்கெட்டிங் என்பதை கருத்தில் கொண்டு முன்னணி நிறுவனமான ஜியோவில் பிரபல நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் ஜியோ நிறுவனத்தில் ரூ.1,04,326.65 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் ஜியோவில் முதலீடு செய்த பிரபல நிறுவனங்கள்:

ஏப்ரல் 22: ரூ.43,574 கோடியை முதலீடு செய்த Facebook நிறுவனம் 9.99% பங்குகளை வாங்கியது.

மே 4: ரூ.5,665.75 கோடி முதலீடு செய்த Silver Lake நிறுவனம் 1.15% பங்குகளை வாங்கியது.

மே 8: ரூ.11,367 கோடி முதலீடு செய்த விஸ்டா நிறுவனம் 2.32% பங்குகளை வாங்கியது.

மே 17: ரூ.6,598.38 கோடி முதலீடு செய்த ஜெனரல் அட்லாண்டிக் 1.34% பங்குகளை வாங்கியது.

மே 22: ரூ.11,367 கோடி முதலீடு செய்த கேகேஆர் நிறுவனம் 2.32% பங்குகளை வாங்கியது.

ஜூன் 5: ரூ.9,093.60 கோடி முதலீடு செய்த முபாதலா நிறுவனம் 1.85% பங்குகளை வாங்கியது.
.

ஜூன் 5: சில்வர் லேக் நிறுவனம் மீண்டும் ரூ.4,546 கோடி முதலீடு செய்து கூடுதலாக 0.93% பங்குகளை வாங்கியது.

ஜுன் 8: அபுதாபி நிறுவனமான ஏடிஐஏ, ரூ. 5,863.50 கோடி முதலீடு செய்து, 1.16% பங்குகளை வாங்கியது.

ஜூன் 13: டிபிஜி நிறுவனம் ரூ.4,546.80 கோடி முதலீடு செய்து 0.93% பங்குகளை வாங்கியது.

————–மேலும் படிக்க—————-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here