ஜியோமி நிறுவனம் ஜியோமி மி ஏ2(Xiaomi Mi A2) மற்றும் ஜியோமி மி ஏ2 லைட்(Xiaomi Mi A2 Lite) என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் ஜூலை 24-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் விபரங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் மற்றும் டூயல் ரியர் கேமரா அமைப்பு, கைரேகை சென்சார் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

ஜியோமி மி ஏ2 மற்றும் ஜியோமி மி ஏ2 லைட் ஸ்மார்ட்போன்கள் 4ஜிபி ரேம் மற்றம் 32ஜிபி/64ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் வருகிறது.

20180425xiaomi-mi-6x-mi-a26

ஜியோமி மி ஏ2:

ஜியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.84-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவருகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. ஜியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனில் 12எம்பி +20எம்பி டூயல் ரியர் கேமரா,எல்இடி பிளாஷ் மற்றும் 20எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் 3010எம்ஏஎச் பேட்டரி, கைரேகை சென்சார் போன்ற அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

DijuG1OV4Aotqat

ஜியோமி மி ஏ2 லைட்:

ஜியோமி மி ஏ2 லைட் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே, 19:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது.

ஜியோமி மி ஏ2 லைட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோமி மி ஏ2 லைட் ஸ்மார்ட்போனில் 12எம்பி +5எம்பி டூயல் ரியர் கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது.

கைரேகை சென்சார் போன்ற அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் 4000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

இந்த ஸ்மார்ட்போன்கள் கருப்பு. சிவப்பு, நீலம் போன்ற நிறங்களில் வெளிவரும்.

இந்த ஸ்மார்ட்போன்களில் ஆரம்ப விலை ரூ.16,200-முதல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here