ஜியோமி நிறுவனத்தின் Mi8 எஸ்இ (xiaomimi8se) , Mi8 (xiaomimi8) மற்றும் Mi8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் (mi8exploreredition) ஸ்மார்ட்போன்களும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய Mi8 எஸ்இ (xiaomimi8se) ஸ்மார்ட்போனில் 5.88 இன்ச் FHD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 சிப்செட், 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI9 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா அழகிய செல்ஃபிக்களை எடுக்க செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் வழங்கப்பட்டுள்ளது.

mi8 se - 03

இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார், 3120 எம்ஏஹெச் பேட்டரி, குவால்காம் க்விக் சாகர்ஜ் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஜியோமி Mi8 எஸ்இ (xiaomimi8se) சிறப்பம்சங்கள்:

– 5.88 இன்ச் 2244×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + 18:7:9 AMOLED வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்
– அட்ரினோ 616 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI 9
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா
– 20 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3120 எம்ஏஹெச் பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0

mi8 se - 05

ஜியோமி Mi8 எஸ்இ (xiaomimi8se) ஸ்மார்ட்போன் பிளாக், புளு, ரெட் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.

4 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.18,960/-.
6 ஜிபி ரேம் மாடல் ரூ.21,070/-.

புதிய ஜியோமி Mi8 எஸ்இ (xiaomimi8se) ஸ்மார்ட்போன் ஜூன் 8-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்