ஜியோமி நிறுவனத்தின் பிளாக் ஷார்க் ஸ்கைவால்கர்(#BlackSharkSkywalker) வகை ஸ்மார்ட்போனின் முக்கிய தகவல்கள் தற்போது வலைத்தளங்களில் கசிந்துள்ளது. பிளாக் ஷார்க் ஸ்கைவால்கர் போன் ஸ்னாப் டிராகன் 855 எஸ்.ஓ.சி மற்றும் 8 ஜிபி ரேம் கொண்டது.

DwY4s_6UwAAoZHW

இன்று(வியாழக்கிழமை) சீனாவில் ஜியோமியின் மற்றொரு போன் Xiaomi Redmi Note 7 வெளியாகும் நிலையில் இந்த தகவல் இணையதளங்களில் வெளியாகியிருக்கிறது.
அண்ட்ராய்டு பை-யில் இயங்கும் இந்த ஜியோமியின் பிளாக் ஷார்கு ஸ்கைவால்கர் கடந்த அக்டோபர் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளிவரவில்லை. இந்நிலையில் உலகம் முழுவதும் ஓரே நேரத்தில் பிளாக் ஷார்க் மற்றும் பிளாக் ஷார்க் ஸ்கைவால்கர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5.99 டிஸ்பிளேயுடன் இந்த போன் இரண்டு பின்புற கேமராக்களை கொண்டது. 12 மற்றும் 20 மெகா பிக்சல் கேமரா. மேலும் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி கொண்டது.
சுமார் 4,000mAh பேட்டரி பவர் கொண்ட இந்த போன் 190 கிராம் எடையுடன் வருகிறது.

இந்த பிளாக் ஷார்க் ஸ்கைவால்கர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் சுமார் 31,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here