ஜியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட் குக்கர் தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ’ஜியோமி மீஜியா இண்டக்ஷன் குக்கர்‘ மற்றும் ‘ஜியோமி மீஜியா ஸ்மார்ட் ரைஸ் குக்கர் ‘ என ஏற்கெனவே சீனாவில் ஜியோமி, சமையலுக்கான பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், அந்த தயாரிப்புகள் இந்தியாவிலும் வெளியாக உள்ளன. வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.இந்நிலையில் இந்த புதிய வரவுகள் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜியோமி குளோபல் நிறுவனத்தின் தலைவர் மனு குமார் ஜெயின் டிவிட்டரில் இந்த புதிய தயாரிப்பை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் எம்ஐ இந்தியா சார்பில் வெளியான இந்த டீசரில், புதிய குக்கர் தொழில்நுட்பத்தை வைத்து பர்கர், பாஸ்தா மற்றும் பீட்சா போன்றவற்றை ஆரோக்கியமான முறையில் தயாரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் வெளியாகியுள்ள இந்த மீஜியா ரைஸ் குக்கர், இந்திய மதிப்பில் ரூ.6,100 க்கு  அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இண்டக்ஷ்ன் குக்கர் பிளேட், ரூ.2000க்கு விற்பனைக்கு வரும்  என எதிர்பார்கப்படுகிறது. ஓலெட் திரையுடன் வரும் இந்த ஸ்மார்ட் தயாரிப்பு, குக்கரின் வெப்பநிலை மற்றும் குக்கரின் மற்ற செயல்பாடுகளை காட்டும்.

ஜியோமி மீஜியா இண்டக்ஷன் குக்கர் இரண்டு வகைகளாக வெளியாகிறது. ஒரு மாடல் ரூ.3,000க்கும்  லைட் மாடல் ரூ2,000க்கும் விற்பனைக்குவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here