ஜியோமி நிறுவனத்தின் Redmi TV வெளியாகியுள்ளது. நேற்று(வியாழக்கிழமை) சீனாவின் பெய்ஜிங் நகரில், முதல் ரெட்மி டிவியை அறிமுகப்படுத்தியது. சியோமியின் இந்த 70 இன்ச் ரெட்மி தொலைக்காட்சி, ‘Redmi TV 70-inch’ என்றே பெயரிடப்பட்டுள்ளது. இந்த டிவி 4K தரம், HDR  வசதி, குவாட்-கோர் ப்ராசஸர், பேட்ச்வால் என பல அம்சங்களை கொண்டுள்ளது.

70இன்ச் ரெட்மி டிவி செப்டம்பர் 3ல் சீனாவில் விற்பனைக்கு வரும் என ஜியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த டிவி இந்திய மதிப்பில் சுமார் ரூ.38,000க்கு விற்பனையாகவுள்ளது.  

தற்போது சினாவில் அறிமுகமாகியுள்ள இந்த டிவி, இந்தியாவில் விரையில் அறிமுகமாகுமென எதிர்பார்க்கலாம். ஜியோமி நிறுவனம் Mi TV-ஐ இந்தியாவில் விரைவாகவே அறிமுகப்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.  

ரெட்மி டிவி 70-இன்ச், 4K திரை, HDR போன்ற அம்சங்களுடன் வருகிறது. மேலும் சுவற்றில் மாட்டுவதற்கும், டேபிள் மீது வைப்பதற்கும் ஏதுவான பேசல்களுடனே அறிமுகமாகியுள்ளது. இந்த ரெட்மி டிவி ஜியோமியின் பேட்ச்வால் தளத்தில் இயங்குகிறது. 2ஜி.பி ரேம் மற்றும் 16ஜி.பி மெமரியுடன், குவாட்-கோர் 64-பிட் அம்லாஜிக் SoC (64-bit Amlogic SoC) ப்ராசஸரில் இந்த டிவி இயங்குகிறது. Dolby Audio மற்றும் DTS HD ஆடியோ தொழில்நுட்பங்களை இணைக்கும் திறனையும் இந்த ரெட்மி டிவி கொண்டுள்ளது.

இந்த டிவியில் வை-பை, ப்ளூடூத் 4.2, இரண்டு USB போர்ட்கள், மூன்று HDMI போர்ட்கள், AV input, என பல வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ரெட்மி டிவியுடன் ப்ளூடூத் மூலம் இயங்கும் வாய்ஸ் ரிமோட்டும் வழங்கப்படுகிறது.

ரெட்மி டிவி மட்டுமின்றி இந்த அறிமுக நிகழ்வில் Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன்கள், புதுப்பிக்கப்பட்ட RedmiBook 14 லேப்டாப் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டது.