ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் கடந்த வியாழனன்று ஜியோமியின் புதிய தயாரிப்பான எம்.ஐ- யின் சவுண்டு பார் அறிமுகப்படுத்தப்பட்டது. Mi LED TV 4X Pro 55 இஞ்ச் டிவி சமீபத்தில் வெளியாகிய நிலையில் தற்போது இந்த புதிய சவுண்டு பார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முப்பது விநாடிகளில் இந்த சவுண்டு பாரை பொருத்தி நீங்கள் என்ஜாய் செய்ய முடியும் என்று ஜியோமி நிறுவனம் கூறுகிறது. 20 மீமி டூம் ஸ்பீக்கர்களுடன் சியோமியின் சவுண்டு பார் வடிவமைக்கப்பட்டுள்ளது. எம்.ஐ நிறுவனத்தின்ன எல்.யி.டி டிவியுடன் இந்த சவுண்டு பார் வெளியாகும் என நம்பப்படுகிறது.

டிவி, லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்களோடு இந்த சவுண்டு பார்-ஐ நீங்கள் நொடிகளில் இணைத்துக்கொள்ள முடியும். மேலும் ப்ளூ-டூத் மற்றும் 3.5 மில்லி மீட்டர் நிளம் கொண்ட ஆக்ஸ் கேபிள் போன்ற அமைப்புகளுடன் வெளியாகியிருக்கிறது.

இந்தியாவில் 4,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த சவுண்டு பார், வரும் ஜனவரி 16 முதல் எம்ஐ.காம் மற்றும் இதர துணை விற்பனை தளங்களிலும் விற்பனைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்