ஜியோபோன் 3 : மலிவு விலையில் 5 ஜி ஸ்மார்ட்போன்

Reliance is yet to reveal the name of the upcoming device. However, rumours suggest that the device will be called JioPhone 3.

0
317

ரிலையன்ஸ் ஏஜிஎம் 2020 நிகழ்வில், ரிலையன்ஸ் நிறுவனம் 5ஜி உள்கட்டமைப்பை நாட்டில் அமைத்து வருவதாகவும், இந்த நெட்வொர்க் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்று தெரிவித்தது.

கூகுள் உடன் இணைந்து 4 ஜி மற்றும் 5 ஜி ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் ஜியோ – கூகுள் ஸ்மார்ட்போனை ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2021 இன்தொடக்கத்தில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மலிவு விலை 5 ஜி ஸ்மார்ட்போன், ஜியோபோன் 3 என்று அழைக்கப்படும் என்று தவல்கள் கசிந்துள்ளன.

வரவிருக்கும் மொபைலின் விலையை ரிலையன்ஸ் குறிப்பிடவில்லை, மொபைல் மலிவு விலையில் இருக்கும் என்று மட்டுமே கூறியுள்ளது. Counterpoint ஆய்வின் படி, இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ .10,000 என நிர்ணயித்து, ஒரு வருடத்தில் சுமார் 60 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய இலக்கு வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ மொபைலின் விலை ரூ.10,000 என்று நிர்ணயிக்கப்பட்டால், இது உலகின் மலிவான 5 ஜி ஸ்மார்ட்போனாக மாறும். தற்போது, இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய மலிவான 5ஜி ஸ்மார்ட்போன், ஒன்ப்ளஸ் நோர்டாகும். இதன்ஆரம்ப விலை ரூ .24,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம், இந்த ஸ்மார்ட்போனைத் தயாரிப்பதில் மட்டுமே முதலீடு செய்யாது. செலவு குறைவாக இருப்பதை உறுதி செய்ய, ஜியோவுக்கு தேவைப்படும் மலிவு விலை 5 ஜி மோடம் மற்றும் மலிவு விலை சிப்செட் போன்றவை ஜியோ-குவால்காம் முதலீடு மூலம் நடைமுறைக்கு கொண்டு வரும். ஒருங்கிணைந்த 5 ஜி மோடம் கொண்ட சிப்செட்டை உருவாக்க இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து, அதன் தற்போதைய மிகவும் மலிவு 5 ஜி சிப்செட்டான ஸ்னாப்டிராகன் 765 ஜி 5 ஜி யை விட மிகவும் மலிவான சிப்செட்டை உருவாக்கும்.

பிசினஸ் இன்சைடரின் தகவலின் படி, ஜியோபோன் 3, முதலில் 4 ஜி ஸ்மார்ட்போனாகஅறிமுகப்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனம் 5 ஜி ஸ்மார்ட்போன்களைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here