இஸ்ரோ நிறுவனம், ஜிசாட்-19 (GSAT- 19) செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி மார்க்-3 (GSLV-Mk III-D1) ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து, திங்கட்கிழமை மாலை 5.28 மணிக்கு ஜிஎஸ்எல்வி மார்க்-3 என்ற ராக்கெட்டின் மூலம் ஜிசாட்-19 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. உள்நாட்டிலேயே கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் கனரக ராக்கெட் இது. நான்கு ஆயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் திறனுடன் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்கைக்கோளின் மொத்த எடை 3,136 கிலோ ஆகும்.

இதையும் படியுங்கள் : “டாஸ்மாக் கடைகளை மக்கள் அடித்து நொறுக்குவதில் தப்பில்லை ”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்