மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் நடைபெற்ற 23வது ஜிஎஸ்டி கவுன்சிலில் 28 சதவிகிதத்திலிருந்து 18 சசதவிகிதமாக 178 பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விகிதம் நவ.15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

1. மின் வயர்கள், கேபிள்கள், மின் சாதனங்கள், ஃபர்னிச்சர்கள், சூட்கேஸ், மெத்தைகள், ஷாம்பூ, ஹேர் டை, வாசனை திரவியங்கள், மின் விசிறிகள், விளக்குகள், கைக்கடிகாரங்கள், ஸ்டவ், மார்பிள் மற்றும் கிரானைட்கள், அலுமினியம் கதவுகள், கண்ணாடி, உடற்பயிற்சி சாதனங்கள், செயற்கை தாவரங்கள், கோகோ பட்டர், சாக்லேட், டெலஸ்கோப், ஆகிய பொருட்களின் மீதான வரி 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

2. வெட்கிரைண்டர் மீதான வரி 28 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

3. இடலி தோசை மாவு, தோல் பொருட்கள், மீன்பிடி வலைகள், இவற்றின் மீதான வரி 12 சதவிகிதத்திலிருந்து ஐந்து சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

4. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, சர்க்கரை உணவுகள், பிரிண்டிங் மை, கண் கண்ணாடி பிரேம்கள், தொப்பிகள் இவற்றின் மீதான வரி 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

5. பிளை ஆஷ், கடலை மிட்டாய் உள்ளிட்ட பொருள்கள், சட்னிப் பொடி இவற்றின் மீதான வரி 18 சதவிகித்திலிருந்து ஐந்து சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நன்றி: The economic times

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்