ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு இவை இரண்டும் மிகப் பெரிய ஊழல் என்று திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் 14வது ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 17ஆம் தேதி (இன்று) நடைபெற்றது. இத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பீகார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் போட்டியிட்டுள்ளார். காங்கிரஸ், திமுக, திரினாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமார் போட்டியிட்டுள்ளார். இதன் முடிவுகள் வரும் 20ஆம் தேதி (வியாழக்கிழமை) அறிவிக்கப்படவுள்ளன.

இது குறித்து பேசிய மம்தா பானர்ஜி, “அநீதிக்கு எதிரான வாக்கு இது. மக்கள் அனைவரும் பாஜகவை எதிர்க்க வேண்டும்.” என்றார். மேலும் பேசிய அவர், ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு இவை இரண்டும் மிகப் பெரிய ஊழல்கள் என்றும், மத்திய அரசு அண்டை நாடுகளான பூடான், நேபாளாம், வங்கதேசம் ஆகியவற்றுடனான உறவை சீர்குலைத்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். பாஜகவுக்கு அடிபணிய மாட்டோம் என்றும், சிறை செல்ல நேர்ந்தால் மகிழ்ச்சியோடு செல்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : உங்கள் வீட்டுப் பெண் ஃபோனும் கையுமாக இருந்தால் இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்