தீப்பெட்டி மீதான 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யாவிட்டால் ஆலைகளை மூடப் போவதாக அதன் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை ஒன்றாம் தேதி, நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமலானது. இதில், இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் தீப்பெட்டிக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இதனை 12 சதவிகிதமாக குறைக்க வலியுறுத்தி, கடந்த ஜூலை மாதத்தின்போது தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதனை வாபஸ் பெற்றனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் நடைபெற்ற 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தீப்பெட்டி மீதான ஜிஎஸ்டி குறைக்கப்படும் என அதன் உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகததால், தீப்பெட்டி ஆலைகளை மூடி அதன் உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்