ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 29 பொருட்கள் மற்றும் 54 வகை சேவைகளுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிகுறைப்பு ஜனவரி 25ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

டெல்லியில், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் 25வது கூட்டம் வியாழக்கிழமை (நேற்று) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 29 பொருட்கள் மற்றும் 54 வகை சேவைகளுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 25ஆம் தேதி முதல் இந்த வரி குறைப்பு அமலுக்கு வரும் எனவும் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

arunjaitley

28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைப்பு: பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மோட்டார் விற்பனை, உயிரி எரிபொருளில் இயங்கும் பேருந்துகள், பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்களில் டிக்கெட் கட்டணம்

18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகக் குறைப்பு: 20 லிட்டர் தண்ணீர் கேன், சொட்டுநீர்ப்பாசம் அமைக்கும் குழாய் உள்ளிட்ட கருவிகள், விவசாயிகள் பயன்படுத்தும் தெளிப்பான்கள், சர்க்கரையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மிட்டாய்கள்

18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைப்பு: புளியங்கொட்டை பவுடர், மருதாணி பசை, தனியார் சமையல் கேஸ் சிலிண்டர்

12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைப்பு: தாவர பொருட்களில் செய்யப்பட்ட கூடைகள், வெல்வெட் துணிகள்

3 சதவிகிதத்திலிருந்து 0.25 சதவிகிதமாகக் குறைப்பு: வைரம் மற்றும் விலையுர்ந்த ஆபரண கற்கள்

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்
[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here