ஜிஎஸ்டி என்றால் என்ன என்று தனக்கு இதுவரை புரியவில்லை என மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் தூர்வே பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், ஜிஎஸ்டி என்பதற்கான அர்த்தம் போக போகத்தான் புரியும் என்றும், ஆடிட்டர்கள் மற்றும் வியாபாரிகளே இதனைப் புரிந்துகொள்ள சிரமப்படுவதாகவும் பேசியுள்ளார்.

நன்றி : ABP News

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளதை மத்திய பாஜக அரசு சாதனையாகக் கூறிக்கொண்டு வரும்நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சரே, ஜிஎஸ்டி என்றால் என்ன என்று இதுவரை தனக்கு புரியவில்லை என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்