ஜிஎஸ்டியில் மாற்றங்கள் தேவைப்படுவதாக மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும், ஒரே சீரான வரிவிதிப்பு ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது. இந்த வரிவிதிப்பினால் சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அத்துறையைச் சார்ந்தவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜிஎஸ்டியில் மாற்றங்கள் தேவைப்படுவதாக மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், ஜிஎஸ்டி கவுன்சிலில் 100க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரி விகிதங்கள் குறைக்கப்பட்டிருப்பதாகவும், அதேபோல இன்னும் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், ஜிஎஸ்டி வரி முறையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு இன்னும் ஓராண்டு காலம் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 23வது கூட்டம், கவுகாத்தியில் வரும் நவ.9ஆம் தேதி நடைபெறவுள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் அனைத்து மாநில பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். முன்னதாக, ஜிஎஸ்டி வரம்புக்குள் ரியல் எஸ்டேட் துறையைக் கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக அமைச்சர் அருண்ஜேட்லி கூறியிருந்தார்.

இதையும் படியுங்கள்: மெர்சலை மெர்சல்னும் சொல்லலாம் மேனா மினுக்கின்னும் சொல்லலாம் – கோலிவுட் வேதாளம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்