ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை ; கருப்பினத்தவர்களுக்கான பேரணியில் 9 நிமிடங்கள் முழங்காலிட்டு அஞ்சலி செலுத்திய கனடா பிரதமர்

Canadian Prime Minister Justin Trudeau walked in unannounced at the rally and mingled with the crowd. He was joined by Somali-Canadian Cabinet colleague Ahmed Hussen, the Minister for Families, Children and Social Development.

0
271

கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் இனவெறிக்கு எதிராகவும் கனடாவில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முழங்காலிட்டு அஞ்சலி செலுத்தினார்.

சென்ற மாதம் 25 ஆம் தேதி அன்று கருப்பினரான ஜார்ஜ் ஃபிளாயிட் என்னும் மினியபாலிஸ் பகுதியைச் சேர்ந்தவரை 4 காவல்துறையினர் கள்ள நோட்டு புகாரில் கைது செய்தனர்.  அவரை கை விலங்குடன் காரில் இருந்து தள்ளிய காவல்துறை அதிகாரி டெரக் சாவின் கழுத்தில் காலால் அழுத்தியதால் அவர் மூச்சு விடமுடியவில்லை எனக் கதறினார்.  காவல்துறை அதிகாரி தொடர்ந்து  அழுத்தியதால் அவர் மரணம் அடைந்தார்.

இதனால் நாடெங்கும் கடும் போராட்டம் வெடித்துள்ளது. 

வெள்ளை மாளிகை முன்பும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டத்தின் போது டிரம்பை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் பதுங்குகுழியில் தங்க வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இவ்வாறு நடைபெறும் போராட்டங்களை போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் , ரப்பர் தோட்டாக்களை வீசியும் கலைத்து வருகின்றனர். இந்தப் படுகொலையை முன்னாள் அதிபர் ஒபாமா கண்டித்தார். பல ஆண்டுகளாக அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் அடக்குமுறையை சந்தித்து வருகிறார்கள். இது போல் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் இந்த இனவெறியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் போராட்டம் நடைபெறுகிறது. அமெரிக்கா தவிர ஐரோப்ப நாடுகளிலும் இந்த போராட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் கனடா தலைநகர் ஒட்டாவாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திடீரென வந்து கலந்து கொண்டார்.

அவருடன் இணைந்து சோமாலியாவின் அமைச்சர் அகமது உசேனும் கலந்து கொண்டார். அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு மரியாதை செலுத்தும் வரையில் ஜஸ்டின் ட்ரூடோ முழங்காலிட்டு மௌன அஞ்சலி செலுத்தினார். இது போல் அவர் 9 நிமிடங்கள் அமர்ந்திருந்தார். அவர் கருப்பு நிற துணியினாலான மாஸ்க்கை அணிந்திருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கருத்து கூறவோ பேட்டி அளிக்கவோ மறுத்துவிட்டார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் யாரும் ஒன்று கூட வேண்டாம் என கூறப்பட்ட நிலையில் பிரதமர் ட்ரூடோ பங்கேற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here