ஜார்க்கண்ட் மாநிலத்தின் பொக்காரோவில் புதிய உருக்காலையை அமைக்கப்போவதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய வேதாந்தா நிறுவனத் தலைவர் அனில் அகர்வால் ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோவில் ஆண்டுக்கு 45இலட்சம் டன் உற்பத்தித் திறன் கொண்ட உருக்காலையை அமைக்க உள்ளதாகத் தெரிவித்தார். இந்தத் திட்டத்துக்குச் சுமார் 28ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும், இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

பொக்காரோவில் உள்ள எலக்ட்ரோஸ்டீல் உருக்காலையை ஏற்கெனவே வேதாந்தா நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. அதில் இரண்டாயிரத்து இருநூறு ஏக்கர் நிலம் உள்ளதாகவும், கூடுதல் நிலம் கையகப்படுத்தித் தர ஜார்க்கண்ட் அரசு  உடன்பட்டுள்ளதாகவும் அனில் அகர்வால் தெரிவித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத் தக்கது.  

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்