ஜாமீனில் வெளியே இருக்கும் மாலேகான் முக்கிய குற்றவாளி சாத்வி பிரக்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஐபிஎஸ் அதிகாரிகள் அமைப்பு

0
176

ஹேமந்த் கர்கரேதான் என்னை தவறாக குற்றவாளியாக்கினார். நான் அப்போதே அவரிடம் கூறினேன், நீங்கள் அழிந்து போவீர்கள் என்று. அவரது பரம்பரையே அழிக்கப்படும் என்று சாபமிட்டேன், அதுதான் 26/11 தாக்குதலின் போது அவர் இறந்தார் என்று கூறியுள்ளார்.

இதை எதிர்த்து ஐபிஎஸ் அதிகாரிகள் கூட்டமைப்பு தங்களது டிவிட்டர் பக்கத்தில்  “அசோக சக்கர விருது வென்ற, வீர மரணம் எய்திய ஸ்ரீ ஹேமந்த் கர்கரே பயங்கரவாதிகளுக்கு எதிராகச் சண்டையிட்டு தியாகியுள்ளார். ஆகவே சீருடை அணிந்த நாங்கள் அனைவரும் மிகவும் புண்பட்டுள்ளோம், வேட்பாளர் தன் கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், எங்களுடைய தியாகங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று பதிவிட்டுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்புக் காவல்படையின் அதிகாரி ஹேமந்த் கர்கரே 2011ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின்போது எதிரிகளுடன் சண்டையிட்டு அதில் வீரமரணம் அடைந்தார். அவரது தியாகம் இந்தியாவே போற்றிப் பாதுகாக்கும் ஒன்று, கர்கரே மீது மக்கள் அதிக மதிப்பு வைத்துள்ளனர் .   

இந்நிலையில் 2008 மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தன்னை கைது செய்த போது கர்கரே தன்னை படுமோசமாக, கடுமையாக நடத்தினார் என்றும் அப்போது சாபம் கொடுத்ததாகவும் சாத்வி பிரக்யா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here