ஜான்வி கபூர் குறித்த கமெண்ட், கெட்டவார்த்தையில் திட்டிய அண்ணன் அர்ஜுன் கபூர்

0
433
Jhanvi Kapoor

ஸ்ரீதேவி உயிருடன் இருந்தவரை அவரது கணவர் போனி கபூரின் முதல் மனைவியின் மகன் அர்ஜுன் கபூர் ஸ்ரீதேவி குடு்ம்பத்துடன் ஒட்டாமலே இருந்தார். போனி கபூரின் சகோதரர்களின் குடும்பங்களும் அவ்வாறே இருந்தன.

ஸ்ரீதேவியின் மரணத்துக்குப் பின் ஸ்ரீதேவியின் மகள்களுடன் பிற குடும்பங்கள் நெருங்கி வந்துள்ளன. ஜான்வியின் பிறந்தநாளுக்கு அவரது ஒன்றுவிட்ட சகோதரிகள் அனைவரும் கேக், மெழுகுவர்த்திகளுடன் ஸ்ரீதேவியின் வீட்டிற்கு வந்தனர். பார்ட்டி நடத்தினர்.

போனி கபூருடன் ஜான்வி, அவரது தங்கை குஷி ஆகியோர் சமீபத்தில் போனி கபூரின் மூத்த தாரத்தின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூரின் வீட்டிற்கு சென்றனர். அப்போது ஜான்வி அணிந்திருந்த உடையை மையப்படுத்தி ஆபாச வசைகள் இணையத்தில் போடப்பட்டன. அதற்கு அர்ஜுன் கபூர் பதிலடி கொடுத்துள்ளார்.

“உங்கள் கண்கள் இதுபோன்ற விஷயங்களைத்தான் தேடும் என்பது வெட்கக்கேடானது. நமது தேசம் இளம் பெண்களை எப்படிப் பார்க்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் இது” என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் ஹாலிவுட் படங்களில் தாராளமாக பயன்படுத்தப்படும் f..k கெட்டவார்த்தையையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

ஸ்ரீதேவி உயிருடன் இருந்திருந்தால், இந்த பதில் ஸ்ரீதேவியிடமிருந்து வந்திருக்கும். அவர் இல்லாத நிலையில் அந்த இடத்தை அர்ஜுன் கபூர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அண்ணேன்டா.

இதையும் படியுங்கள்: ’உன்னைப் பாதுகாக்க முடியவில்லை… மன்னித்துவிடு அசிஃபா’

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்