ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பவுடரைப் பயன்படுத்தியதால் தங்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்குத் தொடர்ந்த 22 பெண்களுக்கு 4.7 பில்லியன் டாலர் (470 கோடி டாலர் சுமார் ரூ.32,200 கோடி) இழப்பீடு வழங்கவேண்டும் என்று அமெரிக்காவின் மிஸ்ஸௌரி மாகாணம், செயின்ட் லூயிஸ் நகரிலுள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குழந்தைகளுக்கான பவுடர் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.

ஜான்ஸன் பவுடர்களில் ஆஸ்பெஸ்டாஸ்’ பொருள் கலக்கப்படுவதாகவும், இதனால் புற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளாகவும் கூறப்படுகிறது. செயின் லூயிஸ் நகரில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்திருந்த 22 பெண்களுக்கு 470 கோடி டாலர் இழப்பீடு வழங்குமாறு ஜான்ஸன் & ஜான்ஸன் நிறுவனத்துக்கு அந்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆரம்பத்தில் 550 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட அமெரிக்காவின் மிஸ்ஸௌரி மாகாண நீதிமன்றத்தின் நீதிபதி, தண்டனைக்குரிய சேதங்களை ஏற்படுத்தியதற்காக கூடுதலாக $ 4.1 பில்லியன் டாலர்களை அபராதமாக விதித்தார்.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் குழந்தைகள் பவுடருக்கு எதிராகத் தொடரப்பட்ட சுமார் 9,000 சட்ட வழக்குகளை எதிர்கொண்டுள்ளது.

இந்த வழக்குத் தொடுத்த 22 பெண்களில் 6 பேர் கருப்பை புற்றுநோயால் இறந்துவிட்டனர். டால்க் என்பது தமிழில் பட்டுக்கல் என்று சொல்லப்படுகிறது . இது ஆஸ்பெஸ்டாஸ் வகையை ஒத்த ஒரு தாதுப்பொருள். இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும்.

”1980-களிலேயே டால்க் புற்றுநோயை உருவாக்கும் என்பது ஜான்சன் நிறுவனத்துக்கு தெரியும். ஆனால், அதை மக்களிடம் இருந்து மறைத்துள்ளது என்றும் அதன் அபாயங்களைப் பற்றி இந்நிறுவனம் நுகர்வோரை எச்சரிக்கத் தவறிவிட்டதாகவும் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினார்கள்.

ஜான்சன் நிறுவனத்தால் மட்டுமல்லாமல் பலவகை அழகு சாதனப் பொருட்கள், சோப்புகள், பவுடர்களில் இவ்வகையான ‘டால்க்’ தாது பயன்படுத்தப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு ஜான்சன்-ஜான்சன் நிறுவனத்தின் டால்க் பவுடரை தொடர்ந்து பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டு இறந்துபோன 62 வயதான பெண்ணின் குடும்பத்துக்கு 72 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும் என ஜான்சன் நிறுவனத்துக்கு அமெரிக்காவின் மிஸ்ஸௌரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்த வழக்குப் பற்றித் தெரிந்துக் கொள்ள click this link – https://www.theguardian.com/world/2016/feb/24/johnson-johnson-72-millon-babuy-talcum-powder-ovarian-cancer

எங்களது தயாரிப்புகளில் ஆஸ்பெஸ்டாஸ்’ இல்லை என்பதிலும் , அவற்றைப் பயன்படுத்துவதால் புற்று நோய் உண்டாகாது என்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் நீதிமன்ற தீர்ப்பு ஆழ்ந்த ஏமாற்றத்தைத் தருவதாகவும் கூறிய ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மேல்முறையீடு செய்யப்போவதாக கூறியிருக்கிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்