ஸ்கீம் என்றால் என்ன என்று டிக்‌ஷனரியை எடுத்துப் பார்த்தாலே தெரியும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, ஸ்டாலின் தலைமையில் காவிரி உரிமை மீட்பு நடைபயணம், திருச்சி மாவட்டம் முக்கொம்பிலிருந்து கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக மூன்றாவது நாளான இன்று (திங்கட்கிழமை) பயணத்தின் ஒரு பகுதியாக, தஞ்சை புத்தூர் பகுதியில் விவசாயிகள் மத்தியில் ஸ்டாலின் பேசினார்.

stalin-1

அப்போது அவர், ”காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென இறுதியான, உறுதியான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தாலும், மோடி தலைமையிலான மத்திய அரசு அதில் சதி செய்து, ’தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ஸ்கீம் என்றால் என்ன?’ என்று விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஸ்கீம் என்றால் என்ன என்று டிக்‌ஷனரியை எடுத்துப் பார்த்தாலே தெரியும்.

எனவே, அதை அவர்கள் புரிந்து கொண்டு இருந்தாலும், ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தூங்குபவர்களை எளிதில் எழுப்பி விடலாம். ஆனால், தூங்குவது போல நாடகம் நடத்திக் கொண்டிருப்பவர்களை எழுப்ப முடியாது. அப்படிப்பட்ட மத்திய அரசுக்கு அடிபணிந்து எடுபிடி வேலை செய்பவராக தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.” என்றார்.

மேலும் பேசிய அவர், “ஜாடிக்கு ஏற்ற மூடி”, என்று ஒரு முதுமொழி உண்டு. இப்போது, “மோடிக்கேற்ற எடப்பாடி”, என்ற புதுமொழி உருவாகியிருக்கிறது.” என்றார்.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்