விக்ரம் பிரபு வால்டர் என்ற படத்தில் அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப் ஆகியோருடன் நடிக்கிறார். இந்தப் படத்தில் நிவின் பாலி நடிப்பார் என கூறப்பட்ட நிலையில், விக்ரம் பிரபுவே தயாரிப்பாளர்களுக்கு கிடைத்துள்ளார். இது குறித்து தயாரிப்பு தரப்பு ஒரு குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. வெயிலுக்கு இதமான நகைச்சுவை துணுக்கு அது.

“எங்கள் நிறுவனம் தயாரிக்க இருக்கும் வால்டர் திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிறவிக் கலைஞன் ஜாக்கி ஷெராப் ஆகியோருக்கு சவால் விடும் வகையில் நடிப்பதற்கு சிம்மக் குரலோன் சிவாஜி குடும்ப வாரிசை விட்டால் எங்களுக்கு வேறு யாரையும் கண்ணுக்கு தெரியவில்லை. இதுவரை நீங்கள் பார்த்த விக்ரம் பிரபு இந்த படத்தில் தெரியமாட்டார். இந்த படத்தின் மூலம் புதியதாய் ஒரு விக்ரம் பிரபு பிறக்க இருக்கிறார். கும்கி படம் மூலம் விக்ரம் பிரபுவை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் லிங்குசாமி அவர்கள் வாயிலாக படத்தின் பெயரையும் நாயகனையும் அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். அன்னை இல்லத்தின் ஆசியோடு அக்டோபர் மாதம் படப்பிடிப்பை துவங்குகிறோம். தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.”

மோடி ஒவ்வொரு வருடமும் புதிய இந்தியாவை பிரசவித்து மக்களை படாதபாடு படுத்துகிறார். இதில் விக்ரம் பிரபுவை புதியதாய் பிறக்க வைக்கப் போகிறார்களாம். புதிய பிறப்பு என்றாலே மக்கள் கிலியாகி ஓடுவது தயாரிப்பாளர்களுக்கு தெரியாதா?

ஜாக்கி ஷெராஃபுக்கு இணையாக நடிக்க விக்ரம் பிரபுவை விட்டால் வேறு யாருமேயில்லை. யப்பா எங்கயிருந்துதான் கிளம்பி வர்றீங்க?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here