Jaguar-F-Type-400-Sport-03-850x418

2018 ஜாகுவார் எஃப் டைப் கார், புதிய 2.0 லிட்டர் இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சினுடன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய மாடல் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

ஜாகுவார் எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் கார் மாடலானது இந்தியாவில் 3.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி6 எஞ்சின் கொண்ட மாடலிலும், 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 எஞ்சின் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது.

Jaguar-F-Type-400-Sport-04-850x548

தற்போது 2.0 லிட்டர் இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட 2018 ஜாகுவார் எஃப் டைப் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஜாகுவார் எஃப் டைப் காரின் 3.0 லிட்டர் வி6 மாடல் ரூ.1.29 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலும்,5.0 லிட்டர் வி8 மாடல் ரூ.2.15 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2018-jaguar-f-type-1-view-79-photos

தற்போது புதிய 2.0 லிட்டர் இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சின் மாடல் ரூ.90.93 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

கன்வெர்ட்டிபிள் மாடல் ரூ.1.01 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.

Jaguar-F-Type-400-Sport-09-850x639

ஏற்கனவே இருந்த 3.0 லிட்டர் மற்றும் 5.0 லிட்டர் மாடல்களைவிட புதிய 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் கிட்டத்தட்ட ரூ.40 லட்சம் குறைவான விலையில் வெளியாகியிருக்கிறது. இதனால், இந்த புதிய மாடல் இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jaguar-F-Type-400-Sport-11-850x639

புதிய 2.0 லிட்டர் இன்ஜெனியம் எஞ்சின் அதிகபட்சமாக 300 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கக் கூடியது. 0 – 100 கிமீ வேகத்தை 5.7 வினாடிகளில் தொட்டுவிடும். இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

Jaguar-F-Type-400-Sport-06-850x639

மேலும், சக்திவாய்ந்த மாடல்களை ஒப்பிடும்போது புதிய 2.0 லிட்டர் எஞ்சின் கொண்ட ஜாகுவார் எஃப் டைப் காரின் எடை 52 கிலோ குறைவானதாக இருக்கிறது. இது காரின் எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களுக்கு சாதக அமைந்துள்ளது.

2018 எஃப் டைப் காரின் சேஸீயிலும் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், கையாளும் தன்மை, சொகுசு, செயல்திறன் என அனைத்திலும் மிகவும் சிறப்பான மாடலாக வந்துள்ளதாக ஜாகுவார் நிறுவனம் தெரிவிக்கிறது.

இதையும் படியுங்கள்

அடுத்த ஜியோ ஃப்ளாஷ் சேலும் JIO.com இணையதளத்திலேயே நடைபெறும்ஜியோ போன் 2-இன் அடுத்த விற்பனை ஆகஸ்ட் 30ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு ஜியோ நிறுவனத்தின் த்தின் Jio.com இணயதளத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் ஜியோ போன் 2 முதன்முதலாக விற்பனைக்கு வந்தது. ஃப்ளாஷ் சேல் என்பதால்...
ஜியோமி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது குறைந்தவிலை ஸ்மார்ட்போனான ரெட்மி 5ஏ-ஐ அறிமுகப்படுத்தியது.இன்று பிற்பகல் 12 மணிக்கு அதற்கான முன்பதிவு MI.com தளத்தில் தொடங்குகிறது. இதன்படி முழுப்பணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்துகொண்டால், அடுத்த ஐந்து வேலை நாட்களுக்குள் ரெட்மி 5ஏ தங்கள் முகவரிக்கே வந்து சேரும். இது தவிர வாராந்திர...
ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவையைப் பெறுவதற்கான முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது.ஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்தி 5 கோடி வீடுகளுக்கு அதிவேக இணைய வசதி வழங்க முடியும். மேலும், இந்த சேவை முதற்கட்டமாக 1100 நகரங்களில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படி விண்ணப்பிப்பது?1. Jio.com / My Jio APP...

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்