இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ஜாமினில் வெளியே வரமுடியாத பிடிவாரண்டைப் பிறப்பித்து தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 1ஆம் தேதியன்று, வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவர், இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் தன்னை ஊக்குவித்ததாகக் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனையடுத்து ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிக் ரிசர்ச் ஃபவுண்டேசன் அமைப்புக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

ஜாகிர் நாயக் மீது கடந்தாண்டு டிசம்பர் மாதம் தேசிய புலனாய்வுத்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக மும்பை அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக பல முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால் மும்பை சிறப்பு நீதிமன்றம், கடந்த ஏப்.13ஆம் தேதியன்று ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம், ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ஜாமினில் வெளியே வரமுடியாத பிடிவாரண்டைப் பிறப்பித்துள்ளது. இனவெறி மற்றும் மதவெறியைத் தூண்டும் விதமாக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்குள் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பிறப்பிக்க இரண்டாவது பிடிவாரண்ட் இது.

இதையும் படியுங்கள் : ”பாபர் மசூதி இடிப்பு”: உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு உமா பாரதி சொன்ன பதில் இதுதான்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்