ஜஹாங்கிர்புரி ஆக்கிரமிப்பு அகற்றல்: முஸ்லிம்‌ சமூகத்தினர்‌ மற்றும்‌ ஏழைகளைக்‌ குறிவைத்து நடத்தப்பட்ட நடவடிக்கை – ப.சிதம்பரம்

0
209

டெல்லியில்‌ அண்மையில்‌ மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகள்‌ அகற்றும்‌ நடவடிக்கை முழுமையான சட்ட மீறலாகும்‌. முஸ்லிம்‌ சமூகத்தினர்‌ மற்றும்‌ ஏழைகளைக்‌ குறிவைத்து நடத்தப்பட்ட நடவடிக்கை நவீன தாக்குதல்‌ நடைமுறை என்றும்‌ குறிப்பிடுவது சரியே’ என்று காங்கிரஸ்‌ மூத்த தலைவரும்‌ முன்னாள்‌ மத்திய
உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம்‌ கூறினார்‌.

டெல்லியில்‌ வன்முறையால்‌ பாதிக்கப்பட்ட ஜஹாங்கிர்புரி பகுதியில்‌ ஆக்கிரமிப்பு கட்டடங்களை அதிகாரிகள்‌ இடித்து அப்புறப்படுத்தியது பெரும்‌ சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. எதிர்க்‌ கட்சிகள்‌ கடும்‌ கண்டனங்களைத்‌ தெரிவித்து வருகின்றன. ஜஹாங்கீர்புரியில்‌ கட்டடங்களை இடிப்பது தொடர்பாக மறு
உத்தரவு வரும்‌ வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும்‌ என்று உச்சநீதிமன்றம்‌ உத்தரவிட்டது. கட்டடம்‌ இடிக்கப்பட்ட பகுதிகளை பல்வேறு அரசியல்‌ கட்சிகள்‌ பார்வையிட்டு கண்டனங்களை பதிவு செய்த நிலையில்‌, அந்த இடத்துக்கு காங்கிரஸ்‌ கட்சியினர்‌ தாமதமாக சென்‌:ஈக விமர்சனங்கள்‌ எழுந்தன. இதுகுறித்து டெல்லியில்‌ செய்தியாளர்களுக்கு (ஏப்-25) நேற்று  பேட்டியளித்த ப.சிதம்பரத்திடம்‌ கேள்வி
எழுப்பப்பட்டது.

“முஸ்லிம்‌ ஆதரவைப்‌ பெறும்‌ நடவடிக்கை’ என்ற பாஜகவின்‌ விமர்சனத்துக்கு ஆளாக வாய்ப்பிருப்பதற்கு பயந்துதான்‌ காங்கிரஸ்‌ கட்சியினர்‌ சம்பவ இடத்துக்கு தாமதமாக சென்றனரா? மென்மையான ஹிந்துத்துவ சார்பு விமர்சனங்கள்‌ எழுந்துள்ள நிலையில்‌, மதச்சார்பின்மை கொள்கையை காங்கிரஸ்‌மேலும்‌ தீவிரமாக வலியுறுத்த வேண்டுமா?’ போன்ற கேள்விகளுக்கு பதிலளித்து ப.சிதம்பரம்‌ கூறியதாவது:

கட்டட இடிப்பு விவகாரத்தை மதத்துடன்‌ தொடர்புபடுத்துவது ஏன்‌? மேலும்‌, மதச்சார்பின்மை என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தின்‌ அடிப்படை கட்டமைப்பின்‌ ஓர்‌ அங்கம்‌. அது காங்கிரஸ்‌ கட்சியின்‌ அடிப்படை மதிப்பீடுகளில்‌ ஒன்று என்பதும்‌ குறிப்பிடத்தக்கது.

டெல்லியின்‌ ஜஹாங்கிர்புரி மற்றும்‌ மத்திய பிரதேசத்தின்‌ கரேகான்‌ ஆக்கிரமிப்புகள்‌ அகற்றல்‌ நடவடிக்கைகள்‌ காரணமாக புல்டோசர்‌ அரசியல்‌’ என்பது அரசியல்‌ அகராதியில்‌ குறிச்சொல்லாக மாறியுள்ளது. ஆக்கிரமிப்புகள்‌ அகற்றல்‌ நடவடிக்கைகளை சட்டத்தின்‌ அடிப்படையில்‌ பாஜக தலைவர்கள்‌ நியாயப்படுத்தி வருகின்றனர்‌.

ஆக்கிரமிப்புகள்‌ அகற்றல்‌ நடவடிக்கைக்கு ஒவ்வொரு ஒவ்வொரு நகராட்சி அல்லது உள்ளாட்சி சட்டங்களில்‌ உரிய நடைமுறைகள்‌ உள்ளன. முதலில்‌ சட்டவிரோத ஆக்கிரமிப்புகள்‌ தொடர்பான தகவல்களை சேகரிக்க வேண்டும்‌; பின்னர்‌ சம்பந்தப்பட்ட நபருக்கு ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நோட்டீஸ்‌ பிறப்பிக்க வேண்டும்‌; சம்பந்தப்பட்ட நபர்‌ ஆட்சேபத்தை தெரிவிக்க அவகாசம்‌ அளிக்கப்பட வேண்டும்‌;
பின்னர்‌, அதனடிப்படையில்‌ உத்தரவு ஒன்றை பிறப்பித்து, சம்பந்தப்பட்ட நபர்‌ மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்‌; மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டால்‌, ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடிப்பதற்கு முன்னர்‌ மேலும்‌ ஒரு நோட்டீஸை ஆக்கிரமிப்பாளருக்கு வழங்க வேண்டும்‌.

இந்த நடைமுறைகள்‌ டெல்லி, மத்திய பிரதேச ஆக்கிரமிப்பு அகற்றல்‌ நடவடிக்கைகளில்‌ பின்பற்றப்படாத நிலையில்‌, இந்த நடவடிக்கை முழுமையாக சட்ட மீறலாகும்‌.

மேலும்‌, இந்த ஆக்கிரமிப்புகள்‌ அகற்றல்‌ தொடர்பாக வெளிவந்த தகவல்களின்‌ அடிப்படையில்‌, இடிக்கப்பட்ட வீடுகள்‌ மற்றும்‌ கடைகளில்‌ பெரும்பாலானவை முஸ்லிம்‌ சமூகத்தினர்‌ மற்றும்‌ ஏழைகளுக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. இந்த கருத்து தவறு என்றால்‌, இடிக்கப்பட்ட குடியிருப்புகள்‌ யாருக்கு சொந்தமானது என்ற சரியான தகவல்களை அதிகாரிகள்‌ வெளியிட வேண்டும்‌. ஆனால்‌, அதுபோன்ற விவரங்கள்‌ இதுவரை வெளியிடப்படாத நிலையில்‌, ‘முஸ்லிம்‌ சமூகத்தினர்‌ மற்றும்‌
ஏழைகளைக்‌ குறிவைத்து நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை, ‘அகற்றும்‌ நவீன தாக்குதல்‌ நடைமுறை’ என்று இதனைக்‌ குறிப்பிடுவது சரியானதே. மேலும்‌, பணக்காரர்கள்‌ பெருமளவில்‌ வசிக்கும்‌ காலனிகளில்கூட பல வீடுகள்‌ சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளன என்று அவர்‌ கூறினார்‌.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here