ஜவுளித்துறைக்கான ஜி.எஸ்.டியை உயர்த்த மோடி அரசு முடிவு; ஒரு லட்சம் ஜவுளித்துறை யூனிட்களை மூடும் ஆபத்து ; 15 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்?

0
294

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகரும், முன்னாள் நிதித்துறை அமைச்சரும், பொருளாதார நிபுணருமான அமித் மித்ரா அவர்கள், மத்திய அரசு ஜவுளித்துறைக்கான ஜி.எஸ்.டியை உயர்த்த முடிவு செய்திருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மிகவும் ஆபத்தானது. ஜிஎஸ்டி உயர்வு அமலுக்கு வந்தால் ஒரு லட்சம் ஜவுளித்துறை யூனிட்களை மூடும் ஆபத்து ஏற்படும். 15 லட்சம் பேர் வேலையிழப்பர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி 45வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜவுளிப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த புதிய விலையானது வரும் ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்த அமித் மித்ரா, இந்தியாவில் ஓரளவு லாபம் ஈட்டக்கூடிய துறையாக ஜவுளித்துறை காணப்படுகிறது.

இதையும் படியுங்கள்:👇

எனவே சிறிய அளவில் செய்யும் எதிர்மறையான மாற்றங்கள் கூட பெரிய அளவில் பாதிக்கும். ஜவுளித்துறையில் அதிகரிக்கப்படும் ஜி.எஸ்.டியானது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த சூழலில் சமீபத்தில் அமித் மித்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் , 2022 ஜனவரி ஒன்றாம் தேதி மற்றொரு பெரிய தவறை செய்வதற்கு மோடி அரசு காத்திருக்கிறது. அதாவது, ஜவுளித்துறையின் ஜி.எஸ்.டியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:👇

இதனால் பல லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும். ஒரு லட்சம் ஜவுளி யூனிட்கள் மூடப்படும். எனவே ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை உடனடியாக பிரதமர் மோடி கூட்ட வேண்டும். கோடிக்கணக்கான சாமானிய மக்களின் மீது தொங்கி கொண்டிருக்கும் கத்தி விழுவதற்குள் ஜி.எஸ்.டி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here