மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தும், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் தேவையில்லை என்றும், நிரந்தரத் தீர்வு ஏற்பட்டால்தான் ஜல்லிக்கட்டை நடத்த விடுவோம் என தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அறிவித்தனர். மேலும், வாடிவாசல் அருகே யாரையும் அனுமதிக்க மாட்டோம் என அலங்காநல்லூர் பகுதி மக்கள் அறிவித்து, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பன்னீர் செல்வம், தமிழக அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டம் நீடித்த நிலையான சட்டம் என மீண்டும் உறுதியளித்தார். மேலும் அவர், தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருவதாகவும், இனி யாராலும் ஜல்லிக்கட்டைத் தடுத்து நிறுத்த முடியாது எனவும் தெரிவித்தார். பிரதமர் அளித்த உறுதிமொழியை ஏற்று அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இதையும் படியுங்கள் : 50க்கும் மேற்பட்ட காளைகளுடன் புதுக்கோட்டை ராப்பூசலில் தொடங்கியது ஜல்லிக்கட்டு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்