ஜல்லிக்கட்டு விவகாரத்தில், மத்திய அரசு இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியிருக்கிறது என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மத்திய அமைச்சரே, நேற்று என்ன சொல்லியிருக்கிறார் என்றால், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இருக்கிறது. அதனால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லியிருப்பது, மத்திய அரசின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. ஏனென்றால், தமிழகத்தை சேர்ந்த சில மத்திய அமைச்சர்கள், தமிழகத்திற்கு வருகிறபோதெல்லாம், நாங்கள் முயற்சித்து கொண்டிருக்கிறோம், இந்த ஆண்டு எப்படியும் நடத்தியே தீருவோம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், இப்போது மத்திய அமைச்சர் அவர்கள் அதற்கு சாத்தியமல்ல என்று கூறியிருப்பது உள்ளபடியே வேதனையளிக்கிறது. நான் கேட்கிற கேள்வி, இதே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம், அதுவும் நான்கு நாட்களில் அமைக்க வேண்டுமென்று உத்தரவிட்டபோது அப்பொழுது அதை ஏற்றுக்கொண்டு, ஆனால் அதற்கு பிறகு உச்சநீதிமன்றம் உத்தரவு போடுவதற்கு உரிமை கிடையாது
என்று மத்திய அரசு அந்த விஷயத்தில் சொல்லுகிற போது, ஏன் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அந்த நடைமுறையை கடைபிடிக்கவில்லை என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. ஆகவே, மத்திய அரசை பொறுத்தவரையில் ஜல்லிக்கட்டு விஷயத்தில் இரட்டை வேடம் போடக்கூடிய நிலைதான் இருந்துகொண்டு இருக்கிறது.” என்றார்.

இதையும் படியுங்கள் : ”ஜல்லிக்கட்டு என்பது வன்முறையான விளையாட்டு; அதனை நடத்தக்கூடாது”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்