ஜல்லிக்கட்டு என்பது வன்முறையான விளையாட்டு என புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் இந்தியா டுடே சார்பில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், கலாச்சாரமாக இருந்தாலும் ஜல்லிக்கட்டை நடத்தக் கூடாது என்றார். மேலும் அவர், ஜல்லிக்கட்டு சட்டப்படி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். காளைகளை அடக்கும்போது காளைகளுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றார். தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்கக்கோரி பல இடங்களில் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திவரும்நிலையில், அவர் இதுபோன்று பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள் : “ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எங்களால் எதுவும் செய்ய இயலாது”: வழக்கம் போல் தமிழர்களை ஏமாற்றிய மத்திய அரசு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்