Jallikattu

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். பொதுமக்களும் அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்டோக்கள், கால் டாக்ஸிகள், வேன்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று போக்குவரத்து தொழிற்சங்கங்களும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.மாணவர்கள் மட்டுமே தொடங்கிய போராட்டத்தில் பொதுமக்கள், ஐடி ஊழியர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் ஆதரவு அளித்துள்ள நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கமும் ஆதரவு அளித்தது போராட்டத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

இதையும் படியுங்கள் : #Jallikattu: லாரிகள் ஓடாது; கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் போராட்டம்; வலுக்கும் ஆதரவு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்