ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமையன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகர் சங்கம் 20ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 20ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க போவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : ஜல்லிக்கட்டு: ஆட்டோக்கள் ஓடாது; போக்குவரத்து தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்