ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீர்ர்களுக்கு ஆதார் கட்டாயம் என போட்டிகளை நடத்தும் விழாக்குழு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 14ஆம் தேதியும், பாலமேட்டில் 15ஆம் தேதியும், அலங்காநல்லூரில் ஜன.16ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. காலை எட்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. இதற்கான முன்பதிவும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் இருந்தால் மட்டுமே போட்டியில் பங்கேற்க இயலும் என விழா கமிட்டி அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: “கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்