ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திடீர் ராஜினாமா; முன்னாள் பாஜக தலைவர் மனோஜ் சின்ஹா நியமனம்

0
238

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் நிலை ஆளுநராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட ஜி.சி.முர்மு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் அவரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

61 வயதாகும் மனோஜ் சின்ஹா கடந்த 1959-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி உத்தரப்பிரதேசத்தின் காஜிப்பூர் மாவட்டம், மோகன்புரா கிராமத்தில் பிறந்தவர். கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தீவிரமாக பணியாற்றியவர் மனோஜ் சின்ஹா.

இந்து பனாராஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த 1982-ம் ஆண்டு படித்தபோது மாணவர்கள் அமைப்பில் சேர்ந்தபோது மனோஜ் சின்ஹாவின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. கடந்த 1996-ம் ஆண்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சின்ஹா, 1999-ம் ஆண்டிலும் மீண்டும் தேர்வானார்.

கடந்த 1989-ம் ஆண்டிலிருந்து 1996-ம் ஆண்டுவரை பாஜகவின் தேசிய செயற்குழுவில் உறுப்பினராக மனோஜ் சின்ஹா இருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்குவந்தபோது அப்போதும் தேர்தலில் போட்டியிட்டு எம்.பியானார் மனோஜ் சின்ஹா. ரயில்வே துறையின் இணையமைச்சராகவும், தகவல் தொழில்நுட்பத்துறைக்கு தனிப்பொறுப்பு அமைச்சராகவும் மனோஜ் சின்ஹா பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்த முர்மு, மத்திய அரசின் தலைமை தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கபடவாய்ப்பு உள்ளதால், அதற்காக அவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here