ஜம்மு – காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில், கலவரக்காரர்களை ஒடுக்குவதற்காக, பாதுகாப்பு படையினர் நடத்திய, துப்பாக்கி சூட்டில், பெல்லட் குண்டு பாய்ந்த 20 மாத பெண் குழந்தை (ஹிபா நிஸார்) பார்வைக்காக மருத்துவமனையில் போராடி வருகிறது.

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கலவரக்காரர்களை ஒடுக்குவதற்காக, பாதுகாப்பு படையினர் நடத்திய, துப்பாக்கி சூடு, கண்ணீர் புகைகுண்டு, பெல்லட் குண்டுகளையும் வீசியுள்ளனர். இதில், வீட்டில் இருந்த 20 மாத பெண் குழந்தையின் இடது கண்ணில் பாய்ந்த ரப்பர் குண்டால் பலத்த காயம் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையின் பார்வை பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

இதுகுறித்து குழந்தையின் தாய் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வெளியே மோதல் நடைபெற்றுக்கொண்டிருந்தது போது எனது இரண்டு குழந்தைகளும் வீட்டில்தான் இருந்தனர். அந்த நேரத்தில் வீட்டிற்கு வெளியே வீசப்பட்ட கண்ணீர் புகைகுண்டால் எனது 5 வயது மகன் மூச்சு விடமுடியாமல் மிகவும் சிரமப்பட்டான். இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்காக வீட்டின் ககதவை திறந்தபோது, வெளியே நின்றுகொண்டிருந்த 3 பாதுகாப்பு ஊழியர்கள் வீசிய பெல்லட் குண்டு என் குழந்தையின் கண்ணில் பட்டு துடித்தாள். எனக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு வந்துவிட்டேன். எனது மகன் தற்போது வீட்டில்தான் உள்ளான். அவனுக்கு என்ன ஆனது என தெரியவில்லை. அவனை யாராவது சென்று பாருங்கள் என்று கூறிய தாய், தனக்கு என்ன நடந்தது என்ன என்பதைக் கூட அறிந்துகொள்ளும் வயதில் அவள் இல்லை. அவள் கடந்து வரும் ஒவ்வொரு இக்கட்டான தருணத்தையும் அவளது தாயான என்னால் மட்டுமே உணர முடியும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here