ஜம்மூ – காஷ்மீரில் நீண்ட நாள் அரசியல் எதிரிகளாக இருந்து வரும் ஒமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இருவரது கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. 3 கட்சி தலைவர்களும் ஆளுநரை சந்தித்து இன்று ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒமர் அப்துல்லாவின் தேசிய கான்ஃபெரன்ஸ் கட்சிக்கும், மெஹ்பூபா முஃப்தியின் பிடிபி கட்சிக்கும் இடையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன . பாஜக, ஜம்மூ – காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பாஜக பிடிக்கும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் புதிய கூட்டணி கூறித்து தகவல் வெளியாகியுள்ளது .

மொத்தம் 87 உறுப்பினர்க் கொண்ட ஜம்மூ – காஷ்மீர் சட்டசபையில், பிடிபி கட்சிக்கு 29 பேர் உள்ளனர். காங்கிரஸுக்கு 12 பேரும், தேசிய கான்ஃபெரன்ஸ் கட்சிக்கு 15 பேரும் சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் மூன்று பேரும் சேர்ந்தால் 44 என்ற பெரும்பான்மைக்கும் மேல் பலம் உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்றோ அல்லது நாளையோ வெளி வரலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

பிடிபி கட்சியைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர், கட்சியிலிருந்து விலகிவிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் கட்சித் தலைவர் ஒருவர், ‘தங்கள் கட்சியிலிருக்கும் எம்.எல்.ஏ-க்களிடம் மற்றவர்கள் பேரம் பேசுவதைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

‘அரசியலில் ஆட்சியில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக மூவரும் எடுக்கும் முயற்சி. இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறாது’ என்று பாஜக-வைச் சேர்ந்த தலைவர் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), பா.ஜ.க. ஆதரவுடன் கடந்த 1-3-2015 அன்று ஆட்சி அமைத்தது. பி.டி.பி. தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல் மந்திரியாகவும், பா.ஜ.க. தரப்பில் நிர்மல் சிங் துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றனர். முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெஹ்பூபா முஃப்தி தலைமையில் பிடிபி – பாஜக கூட்டணி ஆட்சி தொடர்ந்தது.

ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, கடந்த ஜூன் மாதம் கூட்டணி அரசில் இருந்து பாஜக விலகியது. இதையடுத்து முதல்வர் மெஹ்பூபா முஃப்தி ராஜினாமா செய்தார். அதன்பின்னர் எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராததால் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

Courtesy :NDTV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here