ஜனவரி 22; குற்றவாளிகளை தூக்கிலிடும் நாள்; நாடு முழுவதுக்கும் கிடைத்த நீதி – நிர்பயா தாய்

0
207


ஜனவரி 22 ஆம் தேதி, குற்றவாளிகளை தூக்கிலிடும் நாள் -அன்றைய நாள்   நாடு முழுவதுக்கும்   கிடைத்த நீதி  என்று நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி கூறியுள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை ஒரு நல்ல நாள், அதை விடவும், ஜனவரி 22ஆம் தேதி மிகச் சிறந்த நாள் என்று நிர்பயாவின் தாய் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.

நிர்பயா குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து அறிந்த ஆஷா தேவி கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவால் இது ஒரு நல்ல நாளாக அமைந்துவிட்டது. இதைவிடவும், ஜனவரி 22ஆம் தேதி குற்றவாளிகளை தூக்கிலிடும் தினம்தான் எனக்கு மிகச் சிறந்த நாளாக இருக்கும் என்று தெரிவித்தார்.

கடந்த 7 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். அந்த போராட்டத்தின் பலனாக ஜனவரி 22ஆம் தேதி குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் நாள்தான் மிகச் சிறந்த நாள் என்று அவர் குறிப்பிட்டார்.

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 4 குற்றவாளிகளில் இரண்டு பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம், குற்றவாளிகளுக்கு இருந்த கடைசி மற்றும் இறுதி சட்ட நிவாரணம் முடிவுக்கு வந்துவிட்டது. தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது . 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here