ரேஷன் கடைகளுக்கு ஜனவரி10 ஆம் தேதி விடுமுறை இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது

வரும் 9ஆம் தேதி முதல்13ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் வரும் 10 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. ஆனால் பொங்கல் பரிசு வழங்கப்படுவதால் வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை இல்லை எனவும்,  அதற்கு பதிலாக வரும் 16 ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் தைப்பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசில் ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு ஆகியவை வழங்கப்படும். 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை இடம்பெறும்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here