சோனி நிறுவனத்தின் புதிய டச் ஸ்கீரின் ‘வாக்மேன்’

0
130

சோனி நிறுவனம் தனது புதிய வாக்மேன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

உலக அளவில் சோனி நிறுவனத்தின்   ‘வாக்மேன்’ பிரபலமானது. அந்த வகையில் ‘என்.டபிள்யூ ஏ105’ என்ற புதிய ரக வாக்மேன் ஒன்றை சோனி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

ஸ்மார்ட்போன் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த வாக்மேன், 3.6 இன்ச் டச் ஸ்கீரின் கொண்டது. அத்துடன் ஆண்ட்ராய்டு 9 பைய் இயங்குதளத்தில் இது செயல்படும். கறுப்பு நிறத்தில் மட்டும் இந்த வாக்மேன் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 26 மணி நேரம் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் வசதியுள்ளது. அத்துடன் கூடுதலாக 128 ஜி.பி. மெமரியைநீட்டித்துக்கொள்ள முடியும். மேலும், ஸ்டோரேஜ் தேவைப்படும் பட்சத்தில் கூகுள் டிரைவ் ஆஃப்ஷனை இதில் இணைக்கலாம். இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ள இந்த வாக்மேனின் விலை ரூ.23,990 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here