காதலர் தினத்தில் அழகான தேவதையாக வந்து தமிழக இளைஞர்களின் மனதைக் கொள்ளைக் கொண்ட சோனாலி பிந்த்ரேவைப் பற்றி நேற்று வெளியான செய்தி அனைவரையுமே சற்று கலங்க வைத்திருக்கும்.

புற்றுநோய் எனும் ஒரு வார்த்தையே மனதை ஏதோ செய்யும் போது, அதுவும் மனம் கவர்ந்த நடிகை, ஒரு பெண்ணுக்கு இந்த நோய் தாக்கி, அதுவும் முற்றிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வருத்தத்துக்கு உரியதே.

இந்தியாவில் மட்டும் தற்போது 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆண்டு தோறும் புதிதாக 7 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பதாகவும் புள்ளி விவரம் கூறுகிறது.

பல விதமான புற்றுநோய்கள் மக்களை தாக்கும் நிலையில், வாய்ப்புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அதிகமான ஆண்களை தாக்குகின்றன. கருப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் பெண்களை அதிகம் தாக்குகின்றன.

முற்றிய நிலையில், தனக்கு மெடாஸ்டிக் புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பற்றி சோனாலி பிந்த்ரே கூறியிருந்தார். மெடாஸ்டிக் புற்றுநோய் என்றால் என்ன என்று ஆராய்ந்ததில் நமக்குக் கிடைத்த பதில் இதோ..
புற்றுநோய் என்பது, உடலில் அசாதாரண செல்கள் வேகமாக வளர்ந்து பெருகுவதும், அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலையாகும். இது பெரும்பாலும் கட்டிகளாக வளரும். 

இதில் மெடாஸ்டிக் புற்றுநோய் என்றால்.. முற்றிய நிலையில் கண்டுபிடிக்கப்படும் புற்றுநோயை மெடாஸ்டிக் புற்றுநோய் என்பார்கள். புற்றுநோய் உருவான இடத்தில் இருந்து பக்கத்தில் இருக்கும் உடல் பாகங்களுக்கும் புற்றுநோய் பாதித்திருந்தால், அதனை மெடாஸ்டிக் என்பார்கள். அதே சமயம், புற்றுநோய் பாதித்த ஒரு உடல் பாகத்தின் அருகில் இருக்கும் திசுக்களுக்கு புற்றுநோய் பரவியிருந்தால் அதனை மெடாஸ்டிக் என்று கூற முடியாது. அதாவது புற்றுநோயின் முற்றிய நிலை அல்லது 4வது கட்டத்தில் இருப்பதையே மெடாஸ்டிக் என்கிறார்கள்.

அனைத்து விதமான புற்றுநோய்களும் மெடாஸ்டிக் புற்றுநோயாக மாறும் தன்மை கொண்டவையே. ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோயை முற்ற விடாமல் தடுக்க முடியும்.

வயிற்றுப் பகுதியில் குடலை புற்றுநோய் தாக்கினால் குடல் புற்றுநோய் எனலாம். குடலை தாக்கும் புற்றுநோய், அங்கிருந்து பரவி அருகில் இருக்கும் கல்லீரல், நுரையீரல் போன்ற உடல் பாகங்களுக்கும் பரவி அங்கும் கட்டிகளை ஏற்படுத்தினால், அதனை குடல் / கல்லீரல் / நுரையீரல் புற்றுநோய் என்று கூறாமல் மெடாஸ்டிக் புற்றுநோய் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மெடாஸ்டிக் புற்றுநோயை சரி செய்ய முடியுமா?
முற்றிய நிலையில் கண்டறியப்படும் மெடாஸ்டிக் புற்றுநோயை குணப்படுத்துவது கடினம். மிக மெதுவாகவே குணமடையும். மெடாஸ்டிக் புற்றுநோய் பாதித்த நோயாளி சில மாதங்கள் அல்லது வருடங்கள் புற்றுநோயுடனே வாழும் நிலை ஏற்படும்.

ஆனால் தற்போது வளர்ந்த நாடுகளில் எந்த புற்றுநோய்க்கும் சிகிச்சை அளித்து குணப்படுத்தும் அளவுக்கு கீமோதெரபி போன்றவை வந்துவிட்டன.

சிலர், ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவ முறைகளையும் நாடுகிறார்கள். புற்றுநோய் பாதிப்புக்கு இந்த மாற்று மருத்துவங்களும் நல்ல பலனையே அளிக்கின்றன.

இந்த அளவுக்கு முற்றும் நிலையில் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட காரணம் என்ன?

பொதுவாக மனித உள்ளுறுப்புகளை தாக்கும் புற்றுநோய்கள், மார்பகப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் போன்று புற்றுநோய் தாக்கம் குறித்து அவ்வளவு விரைவாக அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை. இதனால்தான் மெடாஸ்டிக் புற்றுநோய்கள் பாதிப்பு குறித்து அறிய தாமதமாகிறது. 

ஆனால், இந்த 7 அறிகுறிகளை வைத்து புற்றுநோய் பாதிப்பு குறித்து அறிந்து கொள்ளலாம். அதாவது, காரணமில்லாத உடல் எடைக் குறைவு, மிக மோசமான இருமல், கழிவறை பழக்கங்களில் மாற்றம், பிறப்புறுப்பு, சிறுநீர், வாய்ப் பகுதியில் இருந்து ரத்தம் வருவது, வீக்கம், காயங்கள் ஆறுதலில் தாமதம், தீவிரமான அழற்சி போன்றவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் நிச்சயம் அவர் மருத்துவரை நாட வேண்டியது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Courtesy : Dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here