சோதனை ஓட்டத்தில் டாடாவின் புதிய கார்: விவரங்கள் வெளியீடு

The Tata HBX has been spotted testing under camouflage. The small crossover is expected to debut in the Indian market around the festive season.

0
119

இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருடத்தின் துவக்கத்திலோ அறிமுகமாகலாம் என கூறப்படும் டாடா ஹெச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி மாடல் கிட்டத்தட்ட தயாரிப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்த நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹெச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி மாடல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமானதைத் தொடர்ந்து இந்த கார் இந்த வருடத்தின் இறுதியிலோ அல்லது 2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலோ அறிமுகக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

EP-KZbi-U4-AEl-HDc-1 EP-Yil-BWo-Agx-FWN EP-Ykki-Xk-AAs-Ng-P EP-Ymzo-X4-AAqlzx EP-Yorj-W4-AEKAe-K grille-97 headlight-43 roof-rails-124 side-view-left-90

புதிய பெயர் ஹெச்பிஎக்ஸ் கான்செப்ட் மாடலுக்கு சூட்டுவது பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. எனினும், இந்த கார் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இதுவரை வெளியான விவரங்களின் படி இதில் வை வடிவ எல்இடி டெயில் லேம்ப்கள், புதிய அலாய் வீல்கள், ஸ்ப்லிட் ஹெட் லேம்ப்கள் உள்ளிட்டவை தெளிவாக காட்சியளிக்கின்றன.புதிய டாடா கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ALFA பிளாட்ஃபார்மில், இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாக்கப்படுகிறது. 

புதிய டாடா காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். 

ரூ.4- 5 லட்சம் அளவில் எக்ஸ்ஷோரூம் விலையுடன் மைக்ரோ எஸ்யூவி மாடலை எதிர்பார்த்திருக்கும் வாடிக்கையாளர்களுக்காக விற்பனைக்கு வரவுள்ள புதிய டாடா ஹெச்பிஎக்ஸ் மாடலுக்கு சந்தையில் மாருதி சுசூகி இக்னிஸ் மற்றும் மஹிந்திரா கேயூவி100 மாடல்கள் போட்டியாக இருக்குமென கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here