சொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ் – முதல் காட்சி முடிவதற்குள் காலா திருட்டு வீடியோ வெளியீடு

சொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ் - முதல் காட்சி முடிவதற்குள் காலா திருட்டு வீடியோ வெளியீடு

0
1039

தமிழ் சினிமா வர்த்தகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து நிற்கிறது தமிழ் ராக்கர்ஸ். புதிய தமிழ்ப் படங்களை இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவேற்றுவதை ஒரு சவாலாகவே தமிழ் ராக்கர்ஸ் செய்து வருகிறது. தமிழ் சினிமாவின் மொத்த வர்த்தகத்தில் கணிசமான பகுதியை இந்த இணையதளம் காவு வாங்குகிறது.

காலா படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது, காலாவின் முதல் காட்சி முடிவதற்குள் அதனை இணையத்தில் பதிவேற்றுவோம் என சவால்விட்டது தமிழ் ராக்கர்ஸ். சொன்னது போல் அதனை செய்தும் இருக்கிறது.

காலா இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் முதல்காட்சி முடிவதற்குமுன் அதிகாலையிலேயே தமிழ் ராக்கர்ஸ் உள்பட சில இணையதளங்களில் காலா படம் வெளியானது. திரையரங்கில் எடுக்கப்பட்ட அந்த காலா படத்தின் திருட்டு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் ராக்கர்ஸை அடியோடு ஒழிப்பது ஒன்றே தமிழ் சினிமா தனது வர்த்தகத்தை தக்க வைத்துக்கொள்ள ஒரேவழியாகும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்