சொந்தமாக வாட்ஸ் அப்-புக்கு நிகரான செயலியை உருவாக்க இந்தியா முடிவு

0
154

இந்தியா, வாட்ஸ் அப் செயலிக்கு நிகரான தனது சொந்த செயலியை உருவாக்க முடிவு செய்துள்ளது.

வாட்ஸ் ஆப் செயலி தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் மூலமாக வெளியிடப்படுகிறது. இதில் பல்வேறு வதந்திகளும் உண்மைக்கு மாறான தகவல்களும் பரவி வருவதாக புகார் எழுந்துள்ளதால் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிக்க இந்தியா தனது சொந்தமான வாட்ஸ் ஆப்புக்கு நிகரான செயலியை உருவாக்கி வருகிறது.

GIMS எனப்படும் இந்த அரசு துரித தகவல் சேவை செயலி தற்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

அரசு அலுவலகங்கள் மற்றும் துறைகளுக்கு இது பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளின் தகவல் பரிமாற்றங்களுக்கு நம்பகத் தன்மை கூடும். ஆங்கிலம் இந்தி தவிர இதர 11 இந்திய மொழிகளிலும் இந்த செயலி விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here