சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 6 கோடி ; TVS XL மட்டுமே வைத்திருக்கும் திமுக வேட்பாளர் இவர்தான்

0
421தென் சென்னை தொகுதி மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்  தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் இணைத்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில் இவரது சொத்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. வேட்பாளர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கலாநிதி வேட்புமனு தாக்கல்

அதில், 5 வங்கிகளில் இவருக்கு 9 வங்கிக் கணக்குகள் இருக்கின்றன. ஆனால், இவரது பெயரிலோ அல்லது இவரது கணவர் சந்திரசேகர் பெயரிலோ ஒரு கார் கூட இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது கணவர் பெயரிலும் பல்வேறு வங்கிகளில் ஏராளமான வங்கிக் கணக்குகள் இருக்கின்றன. 

இவர் பெயரில் இருக்கும் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 14 லட்சத்து, 43,792. இவரது கணவரின் பெயரில் இருக்கும் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1,12,20,170. தமிழச்சியின் பெயரில் ரூ.4,72,64,774 மதிப்புள்ள அசையா சொத்துகளும், கணவரின் பெயரில் ரூ.1,84,04,855 மதிப்புள்ள அசையா சொத்துகளும் உள்ளன.

இதில்லாமல், தமிழச்சி தங்கபாண்டியன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அவரது பெயரில் டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் இரு சக்கர வாகனமும், கணவர் சந்திரசேகர் பெயரில் ஹோண்டா ஆக்டிவாவும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here