எம்ஐ ஏ2 ரெட், முந்தைய போன்களின் விலையையே கொண்டுள்ளது.

ஹைலைட்ஸ்

* ரூ.16,999-க்கு இந்த போனை வாங்கிக் கொள்ளலாம்
* தற்போது 5 வகையில் இந்த போன் கிடைக்கப் பெறுகிறது
 

சையோமி நிறுவனம், எம்ஐ ஏ2 ஸ்மார்ட் போனின் சிவப்பு வண்ணம் வேரியன்டை இன்று முதல் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இன்று மதியம் 12 மணி முதல் அமேசான் தளத்திலும் எம்ஐ தளத்திலும் எம்ஐ ஏ2 சிவப்பு வண்ண போனை வாங்கலாம்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எம்ஐ ஏ2 போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது கருப்பு, கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் லேக் ப்ளூ வண்ணங்களில் இந்த போன் கிடைத்தன.
போனுக்குப் பின்புறம் செங்குத்தாக இருக்கும் 2 கேமராக்கள், குவால்கம் குயிக் சார்ஜ் 4+, ஸ்னாப்டிராகன் 660 எஸ்.ஓ.சி ஆகியவை இந்த போனின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

இந்தியாவில் எம்ஐ ஏ2-வின் விலை மற்றும் பிற வசதிகள்:
சையோமி எம்ஐ ஏ2 போனின் சிவப்பு வண்ண போனின் விலை, முந்தைய போன்களின் விலையிலிருந்து மாறுபடவில்லை. 4 ஜிபி ரேம்/ 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட எம்ஐ ஏ2 போனை, 16,999 ரூபாய்க்கு எம்ஐ.காம் மற்றும் அமேசான் தளத்திற்குச் சென்று வாங்கிக் கொள்ளலாம். இந்த போன் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்படும் போது, 6 ஜிபி ரேம்/ 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட பிரிமியம் வசதி கொண்ட வேரியன்ட் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரை இந்தியாவில் அந்த வகை போன் இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, நானோ டூயல் சிம் வசதி, 5.99 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பக்ட் ரேஷியோ, 403 பிபிஐ பிக்சல் அடர்த்தி உள்ளிட்ட வசதிகள் இந்த போனில் பொருத்தப்பட்டுள்ளன.
கேமராவைப் பொறுத்தவரை, எம்ஐ ஏ2-வுக்கு, இரண்டு பின்புற கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 12 மெகா பிக்சல், முதன்மை கேமரா மற்றும் 20 மெகா பிக்சல் இரண்டாவது கேமராவும் பிரமாதமான படங்கள் எடுக்க உதவியாக இருக்கும். போனின் முன் புறம் 20 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா இருக்கிறது. 3000 எம்ஏஹெச் பேட்டரி, போன் பயன்பாட்டை நீடித்து நிலைக்க வைக்கும்.

courtesy: ndtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here